சினிமா செய்திகள்

உலக ரோஜா தின கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று சென்னையில் நடந்த இந்த தினத்தில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தினத்தின் போது உலகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பிரபல நட்சத்திரங்கள் பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதிதான் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதல் கூட்டம் நடத்தப்பட்டது/ இந்தக் கூட்டத்தில் கிடைத்த நம்பிக்கை காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி கூடுதலாக சில மாதங்கள் உயிர் வாழ்ந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ரோஜா தினம் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று உலக ரோஜா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் கண்டு கலந்து கொண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version