சினிமா செய்திகள்

தாடி, மீசை இல்லாமல் சிம்புவின் புதிய தோற்றம்: வைரல் வீடியோ

Published

on

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நதிகளிலேயே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் மேலும் 5 படங்களில் நடிக்க சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாநாடு’ படத்திற்காக தாடி மீசை கெட்டப்பில் இதுவரை இருந்த சிம்பு தற்போது தாடி மீசையை எடுத்துவிட்டு கிளீன் ஷேவ் உடன் காட்சி தருகிறார். சிம்பு புதிய தோற்றத்துடன் சமையல் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிம்பு பன்னீர் மஸ்ரூம் என்ற உணவை செய்வதாகவும் இந்த உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் தாடி மீசை எடுத்தவுடன் தான் முகமே தெரிகிறது என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வரும் நிலையில் சிம்புவின் புதிய தோற்றம் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version