சினிமா

சிம்பு, நயன்தாராவுக்கு கிறிஸ்தவ முறைப்படி ரகசிய திருமணம் நடைபெற்றது: இயக்குநர் அதிர்ச்சி தகவல்!

Published

on

நடிகர் சிம்புவுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றித் திருமணம் நடைபெற்றதாக இயக்குநர் ஜி.டி.நந்து கூறியிருப்பது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ஜி.டி.நந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நியூஸ்7 சேனலில் பிரத்யேக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஜி.டி.நந்து சிம்பு, நயன்தாரா குறித்து பேசினார்.

அப்போது, சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றித் திருமணம் நடைபெற்றது. அது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரும் பிரிந்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து ஒரு விஷயம் முக்கியமான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இருவரின் ஜாதகம் தான் காரணம் என கூறினார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version