Connect with us

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி பிரச்சனைக்கு சிம்பு காரணமா? ஆர்கே செல்வமணி அறிக்கை!

Published

on

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கத்துக்கும் இடையே நடந்த பிரச்சனைக்கு சிம்பு படம் தான் காரணமா என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நேற்று தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பெப்சி தொழிலாளர்கள் இன்றி இனி தயாரிப்பாளர்கள் படங்கள் தயாரிக்கலாம் என்றும் அதையும் மீறி பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் இயற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை பெப்சி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அன்புடையீர்‌ வணக்கம்‌,

தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ நேற்று அவசர செயற்குழு கூட்டி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனத்துடன்‌ உள்ள ஒப்பந்தம்‌ அவர்களை கட்டுப்படுத்தாது என தீர்மானம்‌ எடுத்ததாக பத்திரிக்கைளில்‌ அறிவித்துள்ளார்கள்‌. இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும்‌ முறைப்படி அனுப்பவில்லை.

சம்மேளனத்தின்‌ தலைவராகிய நான்‌ தயாரிப்பாளர்களின்‌ நலனை சீர்குலைக்கும்‌ வகையில்‌ தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன்‌ வைத்துள்ளார்கள்‌. இது முற்றிலும்‌ தவறான தகவலாகும்‌. தற்போது தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தில்‌ நிர்வாகிகளாக உள்ள அனைவரையும்‌ விட தயாரிப்பாளர்‌ நலனுக்காக நாங்கள்‌ பல விஷயங்களை செய்து தந்துள்ளோம்‌.

இது படமெடுக்கின்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும்‌ நன்கு தெரியும்‌. தற்போது தமிழ்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க தலைவராக உள்ள திரு. முரளி அவர்கள்‌ எங்கள்‌ இனிய நண்பர்‌ மறைந்த இயக்குநர்‌ திரு. இராமநாராயணன்‌ அவர்களின்‌ புதல்வர்‌ ஆவார்‌. அவர்‌ மீது உள்ள மரியாதையில்‌ நான்‌ கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த விரும்பவில்லை. இருப்பினும்‌. நடந்த விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌.

நடிகர்‌ சிம்பு சம்மந்தப்பட்டு நான்கு தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை இருப்பதால்‌ சிம்பு நடிக்கும்‌ திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ சம்மேளனத்தை கேட்டுகொண்டது. சம்மேளனமும்‌ அதன்‌ படியே நடந்து வந்தது. இதற்கிடையே தயாரிப்பாளர்‌ ஐசரி கணேசன்‌ தயாரிக்கும்‌ புதிய படத்திற்கு ‘நான்கு நாட்கள்‌ மட்டும்‌ வெளியூரில்‌ படப்பிடிப்பு நடத்தி கொள்கிறோம்‌. என்றும்‌, மேலும்‌ சென்னையில்‌ படப்பிடிப்பு நடைபெறுவதற்குள்‌ அனைத்து பிரச்சனைகளையும்‌ பேசி சரி செய்த பிறகே சென்னையில்‌ படப்பிடிப்பை துவங்குவோம்‌ என்ற உத்திரவாதத்தை சம்மேளனத்திற்கு வைக்க அதன்‌ படி தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திடம்‌ ஐசரி கணேசனின்‌ கோரிக்கையை சம்மேளனம்‌ தெரிவித்தது. தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌ தயாரிப்பாளர்‌ ஐசரி கணேசனுக்கு பட்ப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி தந்த பிறகே நாங்களும்‌ அப்படப்பிடிப்பில்‌ கலந்துகொண்டோம்‌. இதில்‌ சம்மேளனத்தின்‌ தவறு ஏதும்‌ இல்லை

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனமோ அல்லது அதன்‌ தலைமை பொறுப்பில்‌ இருக்கின்ற ஆர்‌.கே. செல்வமணியாகிய நானோ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கும்‌ இடையேயான ‘கையெழுத்திடப்பட்ட எந்த ஒப்பந்த்தத்தின்‌ விதிகளையும்‌ மீறவில்லை.

ஏதோ காழ்ப்புணர்ச்சியில்‌ பின்புலத்தில்‌ யாரோ இருந்து வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகம்‌ எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நியாயத்திற்கு புறம்பாக எங்கள்‌ சம்மேளன தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால்‌
தமிழ்நாடு முதல்வர்‌ மாண்புமிகு மு.க.ஸ்டாலின்‌ அவர்களிடம்‌ முறையிட்டு தொழிலாளர்களுக்கும்‌ தயாரிப்பாளர்களுக்கும்‌ எந்த பாதிப்பும்‌ இல்லாமல் சுமூகமான தீர்வு கிடைக்கப்பெறுவோம்‌ என்பதை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ சார்பில்‌ தெரிவித்து கொள்கிறோம்‌

இவ்வாறு ஆர்கே செல்வமணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா15 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்15 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா16 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்16 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!