சினிமா செய்திகள்

சிம்புவின் 47வது பட டைட்டில்: ஆச்சரியமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Published

on

நடிகர் சிம்புவின் 47-வது திரைப்படத்தின் டைட்டில் என்று அறிவிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அந்த டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ’வெந்து தணிந்தது காடு’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த டைட்டில் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். ஏ.ஆர் ரகுமான் இசையில் ராஜீவன் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் தாமரை பாடல் வரிகளில் இந்த படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு மிகவும் வித்தியாசமாக தோற்றமளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழுக்கான உடை அணிந்து கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு சிம்பு பார்க்கும் பார்வையே மிகப்பெரிய அளவில் வித்தியாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version