சினிமா செய்திகள்

ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி

Published

on

இன்று ஒரே நாளில் சிம்பு நடித்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருடைய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ’மஹா’ மற்றும் வெந்து தணிந்தது காடு. இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடித்த ’மஹா’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள ஹன்சிகாவுக்கு இது ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜமீல் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சிம்பு நடிப்பில் உருவான மற்றொரு திரைப்படம் ’வெந்து தணிந்தது கா’டு இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

மஹா மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version