சினிமா செய்திகள்

’மாநாடு’ ரிலீஸ் எப்போது? சுரேஷ் காமாட்சி டுவிட்!

Published

on

சிம்புவின் ’மாநாடு’ படம் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக நேற்று தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் பைனான்ஸ் பிரச்சனை குறித்து விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

கலைஞர் டிவிக்காக உதயநிதி ஸ்டாலின் ’மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்கியதாகவும் அந்த தொகையை வைத்து பைனான்ஸ் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று காலை 5 மணி காட்சிக்கு திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் இன்று காலை 8 மணிக்கு படம் ரிலீசாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தாமதத்திற்கு வருந்துவதாகவும் ’மாநாடு’ படம் இன்று கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்றும் கடவுள் அருளால் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யப்பட்டதாகவும் இந்த பிரச்சனையை சரி செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலை 8 மணி முதல் ’மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து திரையரங்கிலும் கேடிஎம் அனுப்பப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் செய்ய ஒத்துழைப்பு கொடுத்த சிம்புவின் தந்தை மற்றும் தாயாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக சிம்புவின் நண்பர் மகத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version