சினிமா செய்திகள்

சிம்புவின் ’மாநாடு’ ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என்றும் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த முறை விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்துடன் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது. அந்த படம் தனியாக வெளிவந்திருந்தால் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கும் என்று கூறப்பட்டது

அதேபோல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீசாகும் தினத்தில் ’மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையும் சிம்பு படக்குழுவினர் தவறு செய்கின்றனர் என்றும் ’அண்ணாத்த’ படத்துடன் மோதுவது பெரிய ரிஸ்க் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறின

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி ரிலீஸ் இல்லை என்றும் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள நிலையி அந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version