சினிமா செய்திகள்

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திற்குப் பாம்பால் வந்த சிக்கல்!

Published

on

நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு படம் என்றாலே பிரச்சனை தான் என்று கூறுவார்கள். ஆனால் இந்த முறை சிம்புவின் படத்திற்குப் பிரச்சனை வந்தது சிம்புவால் அல்ல. படப்பிடிப்பில் பயன்படுத்திய பாம்பால்.

ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு பாம்புடன் இருப்பது போன்ற படமும், வீடியோவும் வெளியானது.

எந்த ஒரு வன விலங்கையும் படப்பிடிப்பில் பயன்படுத்தினால் வன உயிரினங்கள் வதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இந்நிலையில் வன விலங்குகள் நல ஆணையத்திடம் படக்குழுவினர் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே விதிகளை மீறி நடைபெற்றுள்ள சிம்புவின் ஈஸ்வரன் படத்திற்குச் சிக்கல் ஆகியுள்ளது.

Trending

Exit mobile version