சினிமா செய்திகள்

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியிலும் சிம்புதான்: சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் தொகுத்து வழங்கிய கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் திடீரென விலகினார் .

மேலும் ஐந்து வருடங்கள் அவருடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் முடிந்து விட்டதால் பிக்பாஸ் 6வது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிம்பு சிறப்பாக தொகுத்து வழங்கினார் என்றும் கமல்ஹாசனைப் போல தற்பெருமை அதிகம் பேசாமல், நிகழ்ச்சிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சிம்பு பேசினார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன .

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் சிம்பு தொகுத்து வழங்க 70 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

 

Trending

Exit mobile version