சினிமா செய்திகள்

சிம்பு இனி டாக்டர் சிம்பு: வைரல் புகைப்படங்கள்!

Published

on

பிரபல நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் இன்று சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

நடிகர் சிம்பு தனது 6 மாத குழந்தையாக இருந்ததில் இருந்து தற்போது வரை திரையுலகில் சேவை செய்து வருகிறார் என்பதும் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் அவர் செய்த பணிகளை பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

சிம்பு உடன் சேர்த்து பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, தொழிலதிபர் விஜி சந்தோசம் ஆகியயவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் பட்டத்தை சிம்புவுக்கு வழங்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version