சினிமா செய்திகள்

சற்றுமுன் வாக்கை பதிவு செய்த சிம்பு: வைரல் வீடியோ!

Published

on

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் வாக்குப் பதிவு செய்ததை பார்த்தோம். கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி, அருண் விஜய், விக்ரம், பிரசன்னா, சினேகா, த்ரிஷா, ஆண்ட்ரியா, நாசர், சந்தானம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை தி நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடிகர் சிம்பு தனது வாக்கை பதிவு செய்தார். சிம்பு தனது வாக்கை பதிவு செய்ய வாக்குச்சாவடி வந்தபோது அவரது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு அவரை புகைப்படங்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து சிம்புவை அவருடன் வந்தவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்கு பதிவு செய்ய வைத்தனர். வாக்கு பதிவு செய்து விட்டு வெளியே வந்த சிம்புவை மீண்டும் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர். இதனை அடுத்து அவரை அவரது அவருடன் வந்தவர்கள் பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தனர். சிம்பு சென்னை தி நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது

 

 

seithichurul

Trending

Exit mobile version