சினிமா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த சென்றாயனுக்குச் சிம்பு அழைத்துப் பரிசு கொடுத்தார்! வைரலாகும் புகைப்படம்

Published

on

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சென்றாயனுக்குச் சிம்பு அழைத்துப் பரிசு கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் வரும் கமல் ஹாஸனுக்கும் தெரியும். ஐஸ்வர்யா தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆனால் அதற்குப் பதிலாகச் சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.

கோலிவுட் பிரபலங்கள் சென்றாயனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இயக்குநர் நவீனோ பிக் பாஸ் வீடு ஒரு மூடர்கூடம் என்று சாடியுள்ளார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றி சென்றாயனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்ராயனை சிம்பு சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைச் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் மஹத். மேலும், இந்தச் சந்திப்பின் போது சென்ராயனுக்குத் திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்துள்ளார் சிம்பு.

 

சிம்பு சந்தித்துப் பரிசு கொடுத்ததை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெருமையாகக் கூறி வருகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version