சினிமா செய்திகள்

சிம்பு பிறந்தநாளில் 3 முக்கிய அறிவிப்புகளா? ரசிகர்கள் குஷி!

Published

on

நடிகர் சிம்பு பிறந்தநாள் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தமிழ் திரையுலகில் உச்சம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிம்பு தனது பிறந்தநாளை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சிங்கிள் பாடல் சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு ஏஆர் ரகுமான் கூட்டணியில் மிக சூப்பரான பாடல்கள் இந்த படத்தில் உருவாகி இருப்பதாகவும் இந்த பாடல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்பு நடித்து வரும் ‘பத்து தல’ படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் கேரக்டர் குறித்த கெட்டப் உடன் கூடிய இந்த போஸ்டர் ரசிகர்களை உற்சாகமூட்டும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படமான ’மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50வது படமான இந்த படத்தில் சிம்பு முதலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தான் கமிட் ஆனார் என்பதும் அதன் பிறகு அவரது கேரக்டர் விரிவாக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version