சினிமா செய்திகள்

ஸ்லிம்மாக திரும்பி வந்த சிம்பு; மாநாடு ஷூட்டிங் எப்போது?

Published

on

உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டன் சென்ற சிம்பு ஸ்லிம்மாக திரும்பி வந்துள்ளார்.

லண்டனிலிருந்து ஸ்லிம்மாக திரும்பி வந்த சிம்பு தனது தம்பி குறளரசன் திருமணத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில் குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் வெங்கட் பிரபு ‘சிம்பு திரும்பி வந்துவிட்டார்!!! மே மாதம் முதல் மாநாடு ஷூட்டிங் தொடங்குகிறது!!!” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ப்ரேம்ஜி அமரன், சிம்புவுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மாநாடு ஷூட்டிங் பிப்ரவரி மாதமே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் சிம்புவின் உடல் எடை மற்றும் சதை இரண்டும் கதைக்குப் பிரச்சினையாக இருக்க லண்டன் சென்று ஸ்லிம்மாக திரும்பியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி மாநாடு திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version