சினிமா செய்திகள்

உண்மையாகிறது கிசுகிசு: சிம்புவுக்கு அந்த நடிகையுடன் திருமணம்!

Published

on

பொதுவாக திரையுலகில் ஒரு நடிகர் ஒரு நடிகையை காதலிப்பதாக கிசுகிசு வரும் என்பதும் இதில் பெரும்பாலானவை கிசுகிசுவாகவே போய்விடும் என்பதும் ஒரு சில செய்திகள் மற்றும் உண்மையாகி திருமணம் நடக்கும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சிம்புவுடன் பல நடிகைகள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நிதி அகர்வால் அவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது .

அதுமட்டுமின்றி இருவரும் லிவிங் டுகெதர் முறையில் தனி வீடு எடுத்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி சிம்புவின் பெற்றோர்களும், நிதி அகர்வால் பெற்றோர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் ஒரு நல்ல நாளில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்றதும் அதேபோல் நிதி அகர்வால் பவன் கல்யாணுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version