பிற விளையாட்டுகள்

சீன வீராங்கனையிடம் தோல்வி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை பவினா

Published

on

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது என்பதும் அந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் வீராங்கனைகள் ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்று குவித்தார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அதே டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பவினா என்பவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். இதனை அடுத்து இந்தியாவுக்கு பதக்கம் உறுதி என்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் நான்கு பிரிவுகள் கொண்ட இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சூயிங் இடம் இந்தியாவின் பவினாபென் தோல்வியடைந்தார். இருப்பினும் அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை பவினா வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version