சினிமா செய்திகள்

சில்க் ஸ்மிதா படத்தில் நடித்த இளம் நடிகை சடலமாக மீட்பு.. மரணத்திற்கு இது தான் காரணம்!

Published

on

ஆர்யா பானர்ஜி

சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்திற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல சித்தாரிஸ்ட்டான நிகில் பான்டிபோதியாயின் மகள் ஆர்யா பானர்ஜி. இவர் மாடலிங் துறையில் பிரபலமானவர். சில்க் ஸ்மிதாவின் பயோபிக் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று, நடிகை ஆர்யா பானர்ஜி அவரது வீட்டில் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார். பின்னர் போலீசாரின் உதவியுடன் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கதவை உடைத்து பார்த்த போது சடலமாக கிடந்தார்.

ஆர்யா பானர்ஜியின் மரணம் கொலையா, தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், ஆர்யா பானர்ஜியின் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சம்பவத்தன்று ஆர்யா பானர்ஜி அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் உட்கொண்டுள்ளார் என்றும், அவரது உடலில் ஆல்கஹாலின் வீரியம் கடுமையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆர்யா பானர்ஜியின் இறப்பிற்கு, அவர் அதிகப்படியான ஆல்கஹாலை உட்கொண்டதே காரணம் என்பது உறுதியாகியுள்ளது

seithichurul

Trending

Exit mobile version