சினிமா செய்திகள்

சிலிக்கான் வேலி வங்கி திவால்.. கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பிரபல நடிகை..!

Published

on

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி திவாலான செய்தி உலகையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதும் இதனால்அமெரிக்க பங்கு சந்தை மட்டுமின்றி இந்தியா உள்பட உலக பங்கு சந்தையே ஆட்டம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிலிக்கான் வேலி வங்கியில் முதலீடு செய்த பிரபல நடிகை ஒருவர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் என்பவர் தெரிவித்துள்ளார். ஒரு விருது வழங்கும் விழாவில் அவர் இதனை தெரிவித்ததோடு பெண்கள் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு ஒரு சில லட்சங்களை அவர் நன்கொடையாகவும் அளித்தார்.

இந்த விருது வழங்கும் விழாவில் தைரியமான நட்சத்திரம் என்ற விருது கொடுத்டு கௌரவிக்கப்பட்ட பின் அவர் தனது பேச்சை தொடர்ந்தார். ‘எவ்வளவு பணத்தை எங்கே செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனாலும் நமக்கும் தெரியாமல் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. நான் முதலீடு செய்த பெரும் பகுதி பணத்தை சிலிக்கான் வேலி வங்கியால் நான் இழந்துவிட்டேன். அதற்காக நான் நஷ்டம் அடைந்து ஓடி விடுவேன் என்று அர்த்தம் அல்ல என்று கூறினார்.

தனக்கு மார்பக புற்றுநோய் வந்தபோது தனது மார்பகங்களை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்களும் தனது குடும்பத்தினரும் கேட்டுக்கொண்ட போது அவர் தாமதம் இன்றி தனது மார்பகங்களில் ஒன்றை அகற்றி விட்டதாகவும் ஆனால் அது பலருக்கு தெரியாது என்றும் கூறினார்.

எனவேதான் பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதனால் கலந்து கொள்வேன் என்றும் என்னால் முடிந்த நிதி உதவி செய்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிலிக்கன் வேலி வங்கி இந்த மாத தொடக்கத்தில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது என்பதும் அதன் பின் திவால் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷரோன் ஸ்டோன் தவிர மேலும் பல அமெரிக்க நட்சத்திரங்களும் இந்த வங்கியில் முதலீடு செய்திருந்தனர் என்றும் அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த வங்கியில் தான் பெரும் தொகையை முதலீடு செய்திருந்தன என்பதும் அந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

சிலிக்கன் வேலி வங்கியை அடுத்து சிக்னேச்சர் வங்கியும் திவால் ஆனது என்பதும் அது மட்டும் இன்றி ஐரோப்பிய வங்கியான கிரெடிட் சூசியை வங்கியும் திவால் ஆகும் நிலைக்கு வந்த நிலையில் யூஎஸ்பி அந்த வங்கியை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version