சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு தன்னுடைய பிறந்தநாள் ட்ரீட்டை அறிவித்த சிலம்பரசன்…

Published

on

தன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பரிசை அறிவித்தை சிலம்பரசன்…

நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக அன்று மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மிகத் தீவிரமாக தனது நடிப்பை தொடர்ந்து வரும் சிலம்பரசன் சமூக வலைதளங்களில் தன்னுடைய ரசிகர்களுக்கு தொடர்ந்து பல அப்டேட்களை அளித்து வருகிறார். அந்த நிலையில் ஜன.28ல் கௌதம் மேனனுடன் தன்னுடைய 48வது படம் அமைய உள்ளதை அறிவித்தார்.

தற்போது மாநாடு படத்தின் டீசர் தன்னுடைய பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு…

வணக்கங்கள்.

எத்தனை தடைகளை கடந்து வந்தாலும்…

என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு.

அதுதான் நான் அடுத்தடுத்து படங்கள் தருவதற்கும், உடல் எடையைக் குறைத்து

உத்வேகமானதற்கும் மிக முக்கிய காரணம்.

கொரோனா காலகட்டத்தில் வெகு விரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பைக் கொடுத்து வெற்றி பெறச் செய்தீர்கள்.

உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்லுவதை விட எனது குடும்பம் என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும்

உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

எனது பிறந்தநாளன்று நஅன் உங்களோடுதான் இருக்க வேண்டும். ஆனால், சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை.

வெளியூர் செல்கிறேன்.

என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதானல் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாள் அன்று சந்திக்க வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.

உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன்.

நாம் சந்திப்போம்.

ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்தநாளன்று “மாநாடு” டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சய்ம் இனி நமது ஆண்டாகா வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்

அனைவருக்கும் அன்பும்… நன்றியும்…

அன்புசெய்வோம்

உங்கள் சிலம்பரசன் TR

Trending

Exit mobile version