சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை வாங்கிய ஹாட்ஸ்டார்!

Published

on

சிம்பு நடிப்பில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வேகமாகத் தயாராகி 2021 பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

மாஸ்டர் உடன் வெளியானதால் பெரும் வரவேற்பைப் படம் பெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்ற குடும்ப படமாக அமைந்தது.

ஈஸ்வரன் படம் வேக வேகமாகத் தயாரானதால் அப்போது ஓடிடி, சாட்டிலைட், மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமைகள் விற்கப்படவில்லை. திரை அரங்குகளிலும் படம் சரியாகப் போகவில்லை. எனவே தயாரிப்பாளருக்கு 2 கோடி நட்டம் ரூபாய் என்று தகல்கள் வந்தன.

தற்போது ஈஸ்வரன் படத்தின் சாட்டிலைட் உரிமை ஸ்டார் விஜய் டிவியிலும், ஓடிடி உரிமை ஹாட்ஸ்டாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

என்ன விலைக்கு ஈஸ்வரன் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஈஸ்வரன் படம் ஏப்ரல் 14-ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதால், கண்டிப்பாக ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளருக்கு ஓர் அளவிற்கு லாபம் கிடைத்து இருக்கும்.

seithichurul

Trending

Exit mobile version