சினிமா செய்திகள்
பிரபல நடிகையிடம் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் சிம்பு.. வைரலாகும் புகைப்படம்!
நடிகர் சிம்பு திண்டுக்கல்லில் சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, தீவிரமாக நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அதற்கு பின்பாக சிம்பு வெளியிட்ட ஸ்லிம் போட்டோ ஷூட் உள்ளிட்ட திரைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
யாரடி மோகினி, வெண்ணிலா கபடிக் குழு ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் சரண்யா மோகன். தற்போது அவரிடம் சிம்பு பரத நாட்டியம் பயிற்சி பெற்று வரும் புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.
ஈஸ்வரன் படப்பிடிப்பு செல்லும் முன்பு சிம்பு கேரளா சென்று சில வாரங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டது அனைவருக்கும் தெரியும்.
அப்போது சிகிச்சையின் இடைப்பட்ட காலத்தில் சிம்பு, சரண்யா மோகனிடம் பரதநாட்டியம் பயிற்சி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிம்புவுக்கு ஏற்கனவே பரதநாட்டியம் தெரியும் என்றாலும், தற்போது மீண்டும் அதற்கான பயிற்சியை அவர் பெற்று தன்னை புதுப்பித்துக்கொண்டு வருகிறார்.
சுமார் 101 கிரோ எடையிலிருந்து தற்போது 69 கிலோ வரை சிம்பு தனது உடை குறைத்துள்ளதாக அவரது ஜிம் கோச் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரண்யா மோகன் திருமணத்திற்குப் பிறகு பரதநட்டியன் பயிற்சியாளராக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.