சினிமா செய்திகள்

மாநாடு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Published

on

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நேற்று மாநாடு படம் குறித்து முக்கிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று சிம்புவும், வெங்கட் பிரபுவும் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நவம்பர் 21-ம் தேதி காலை 10:44 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

அரசியல் பின்னணியை மையமாக கொண்டு உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தின் ஷூட்டிங் இப்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மாநாடு திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இடை என்பதால், பிரேம்ஜி அமரனுக்குக் கண்டிப்பாகப் படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்று இருக்கும். எஸ்.ஜே.சூர்யாவும் மாநாடு படத்தில் இணைந்துள்ளார். ஆனால் என்ன கதாபாத்திரம் என்ற விவரங்கள் தெரியவில்லை.

சிம்பு மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமியர் வேடத்தைச் சூடியுள்ளார். ஈஸ்வரன் படத்தில் முருக பக்தன். மாநாடு படத்தில் இஸ்லாமியர் என இரண்டு படத்திலும் வித்தியாசமாகத் தோன்றுகிறார்.

புதுச்சேரியில் நவம்பர் 9-ம் தேதி தொடங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் ஒரே ஷெட்ய்லாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version