சினிமா செய்திகள்

சிம்புவின் ஈஸ்வரன் படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ புதிய அப்டேட்!

Published

on

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராகி வரும் படம் ஈஸ்வரன்.

சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தமன் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே ஈஸ்வரன் படத்தின் தமிழன் பாட்டு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள ஈஸ்வரன் படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் 7.5 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அது குறித்து அதிகாரப்பூர்வமாகவும் அந்நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நேற்று ஈஸ்வரன் படம் குறித்து முக்கிய அப்டேட் வரும் என்று இயக்குநர் சுசீந்திரன் அறிவித்து இருந்தார். ஆனால் அவரது கணக்கு முடக்கப்பட்டது. அந்த முக்கிய அறிவிப்பு இதுதானா என்ற தகவல் தெரியவில்லை.

seithichurul

Trending

Exit mobile version