சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்தின் தமிழன் பாட்டு.. இன்று காலை 10:08 மணிக்கு வெளியீடு!

Published

on


சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாவதாகச் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 10:08 மணிக்கு ஈஸ்வரன் படத்தின் தமிழன் பாட்டு வெளியாகிறது. மேலும் பாடல் வரிகள் வீடியோ மாலை 4:50 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் நந்திதா இருவரும் நடித்துள்ளனர்.

பாரதிராஜா, பால சரவணம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version