விமர்சனம்

ஈஸ்வரன் சிம்பு கம்பேக்குக்கு உதவினாரா? – ஈஸ்வரன் விமர்சனம்

Published

on

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்னைகளும் அந்தப் பிரச்னைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை.


2019-க்குப் சிம்பு நடிக்கும் படம், சுசீந்திரன் இயக்கம், அதுவும் குறுகிய காலத்தில் எந்த பிரசனையும் இல்லாமல் சிம்பு ஷுட்டிங் முடிச்ச படம் என இந்த படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்த பல காரணங்கள் இருக்கின்றன.
ஈஸ்வரனாக சிலம்பரசன் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் இருந்ததை விட பாதியாக வந்து நிற்கிறார். முடிந்த அளவு கை… கால்களை ஆட்டாமல் பன்ச் பேசி வெறுப்பேத்தாமல், பில்டப் கொடுக்காமல் (அங்கே அங்கே இருக்கின்றன. ஆனால் சலித்து கொள்ளலாம்) நடித்ததற்காகவே சிம்புவை பாராட்ட வேண்டும். இரண்டு நாயகிகள் இருந்தும் காதல் காட்சிகள் இல்லை. நந்திதா எதற்கு… வாயை கூட அசைக்க தெரியாத நீதி அகர்வால் எதற்கு என்பது இயக்குநருக்கு தான் வெளிச்சம். ஒரே ஒரு சண்டை காட்சி… ஆனால் இரண்டு வில்லன்கள். அதுவும் எதற்கு என்று தான் தெரியவில்லை (ட்ரைலரில் கட்டாத இன்னொரு வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ்). ஆனால், சிம்பு முடிந்த அளவு சிறப்பாக நடித்திருக்கிறார். இவ்ளோ நாள் ஆனாலும் எப்படி அவரால் இவ்வளவு ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது என்பதற்கு அவரது நடிப்பு… ஸ்க்ரீன் பிரசன்ஸ், டான்ஸ், காமெடி சென்ஸ் எல்லாம் காரணமாக இருக்கலாம். (இவை எல்லாம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் முந்தைய படங்களை ஒப்பிடும் போது 200% சிறப்பாகவே செய்திருக்கிறார்.) சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு அசுரனை எச்சரிக்கவும் செய்கிறார்.
பாரதிராஜா கொஞ்சம் ஓவராக நடித்தாலும் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சில இடங்களில் அப்லாஸ் அள்ளுகிறார். உண்மையில் பாண்டிய நாடு படத்தில் பாரதிராஜா செம்மையாக நடித்திருப்பார். அந்த அளவு கனமான கதாபாத்திரமாக இவரது பாத்திரம் எழுதப்பட்டவில்லை தான். பாலசரவணன், முனிஸ்காந்த் வரும் சில காட்சிகளில் சிரிப்பு கொஞ்சமாக வர முயன்றது. அவ்ளோ தான்.
தமன் இசை… தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து… இசை அமைத்து இப்படியா ஆகிவிட்டார் போல. படத்திற்கு முழு தெலுங்கு வாசனை தருகிறார் தன் இசை மூலம். சகிக்க முடியவில்லை. பாடல்… பின்னணி இசை… பில்டப் பிஜிஎம் ஏதும் காதில் ஏறவில்லை. ரத்தம் வராத குறைதான்.
திண்டுக்கல்லை மையமிட்டு கதை திரைக்கதை அமைத்த சுசீந்திரன் படங்கள் எல்லாம் செம்ம ஹிட். நமக்கு ஒரு கம்பேக் அதே மாதிரி இருக்கணும் என்று சிம்பு நினைத்திருக்கலாம். இந்த கதையை தேர்ந்தெடுக்கும் போது. ஆனால் அழுத்தம் இல்லாத கதை, திரைக்கதை மூலம் சிம்புவை மட்டும் இல்லை நம்மையும் ஏமாற்றி விட்டார். காட்சி, உறவுகளுக்குள் ஒரு வரும் சொத்து பிரச்னை, பழி வாங்க வில்லனுக்கு இருக்கும் காரணம், காதல் காட்சிகள் என ஒண்ணு கூட புதுசு இல்லை இந்தப் படத்தில். ஆனால் படம் மட்டும் நியூ ரிலீஸ்… கொடுமை…


படம் 2 மணி நேரம்… இண்ட்ரோ ஸீன் 20 நிமிடம்… கொரோனா ஸீன் 15 நிமிடம் (கொரோனா டெஸ்ட் எடுத்து இதயத்தில் இருக்கும் ஓட்டையை கண்டுபிடிக்கவும் செய்யலாம் போல. படத்தை பாருங்க புரியும்), வில்லனுக்கு ஒரு பிளாஷ் பேக்… ஹீரோவுக்கு ஒரு பிளாஷ் பேக் மொத்தம் 15 நிமிடம்… டீசரில் வந்துச்சே ஒரு பாம்பு ஸீன் அதுக்கு ஒரு 15 நிமிடம்… (இங்கையும் ஒரு மெடிக்கல் மிராக்கில்… பாம்பு கடிச்சி ரெண்டு சண்டை போட்டு மருத்துவமனை போனா ஒரே ஊசில ஒரு நிமிசத்தில குணம் ஆயிடுது) கிளைமாக்ஸ் ஒரு 20 ன் நிமிடம்… அப்புறம் பாட்டுக. இவ்ளோ தான் ஈஸ்வரன்.
பொழுது போகும்னு தியேட்டருக்கு போனா… அங்க எப்படி பொழுதை போக்குறதுன்னு உக்காந்திருக்க வச்சுட்டாரு இந்த ஈஸ்வரன். கொஞ்சம் பாத்து பண்ணியிருக்கலாம்… வேற என்ன சொல்ல… பாவம் சிம்பு… ஐயோ பாவம் நாம்…
நீண்ட நாளுக்கு பிறகு வருகிறோம். ரசிகனுக்காக… பெண் ரசிகைகளுக்காக நல்ல குடும்ப படத்தில் கம்பேக் கொடுக்கணும் நெனச்சது சரிதான். ஆனால் கதை… திரைக்கதை… அதை சரியா கொண்டு போகும் இயக்குநர் பத்தியும் யோசிச்சு இருக்கணும்.

seithichurul

Trending

Exit mobile version