சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படக்குழுவினருக்குத் தீபாவளி பரிசாகத் தங்க நாணயம் வழங்கிய சிம்பு!

Published

on

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு 30 நாட்களுக்குத் திட்டமிட்டு நவம்பர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது.

ஈஸ்வரன் படப்பிடிப்பில் 29 நாட்கள் பங்கேற்று நடித்து முடித்த சிம்பு, படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஈஸ்வரன் படத்தில் நடித்த 200 துணை நடிகர்களுக்கும் வேட்டி, சேலை, இனிப்பும் சிம்பு வழங்கியுள்ளார்.

கிராமத்துப் பின்னணியில் ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்துக்கு முக்கியத்துவம் அளித்த படமாக ஈஸ்வரன் உருவாகி வருகிறது. சிம்புவுடன் பாரதி ராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசை அமைக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், டீசர் தீபாவளிக்கு வெளியாகிறது. படம் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version