சினிமா செய்திகள்

சிம்பு பிளாஸ்டிக் பாம்பை தான் பிடித்தார்.. ஈஸ்வரன் படக்குழு விளக்கம்!

Published

on

சிம்பு பிளாஸ்டிக் பாம்பைத்தான் பிடித்தார் என்று ஈஸ்வரன் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

சிம்பு ஈஸ்வான் திரைப்படத்தில் பாம்பு பிடிப்பது போன்ற ஓரு காட்சி இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையானது.

அதுகுறித்து வன விலங்குகள் நல ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்க்கு ஈஸ்வரன் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

அதில், சிம்பு பிளாஸ்டிக் பாம்பை தான், ஈஸ்வரன் படப்பிடிப்பில் பிடித்தார். அது படத்தில் வெளியாகும் போது கிராபிக்ஸ் செய்து நிஜப் பாம்பு போல மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வன விலங்குகளைப் படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தினால், வன விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இப்படி ஏதேனும் காட்சிகள் இருந்தால் அதற்கு வனத்துறையினரிடமிருந்து முன்னதாகவே அனுமதி பெற வேண்டும். ஆனால் ஈஸ்வரன் படக் குழுவினர் வனத் துறையினரிடம் அனுமதி பெறாமல், வாய் தக்கப்பட்ட பாம்பை படப்பிடிப்பில் பயன்படுத்தியதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.

எனவே பாம்பை பிடித்த சிம்பு மற்றும் படக்குழுவினரின் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெள்ளிக்கிளமையுடன் முடிவடைந்துள்ளது. டீசர் தீபாவளிக்கும் படம் பொங்கலுக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version