இந்தியா

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி.. இன்று முதல் சோதனை ஒத்திகை.. மத்திய அரசு அதிரடி!

Published

on

மத்திய அரசு, கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

முதற்கட்டமாக அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 30 கோடி நபர்களுக்கு இந்த கோரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட உள்ளது.

சோதனை ஒத்திகை

ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசிக்கான சோதனை முயற்சி, அனைத்து மாநிலஙள் மற்றும் யூனியன் பிரதசங்களில் 3 முக்கியமான இடங்களில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சோதனை சோதனை முயற்சிக்காக அனைத்து மாநிலங்களும் சுகாதரத்துறை உடன் இணைந்து முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர்.

யாருக்கு முதலில்?

கோவிஷீல்ட் தடுப்பூசி முதலில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வழங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

விலை

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி விலை 500 முதல் 600 ரூபாய் வரை இருக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அசர் பூனாவாவாலா தெரிவித்துள்ளார்.

எப்போது முதல் கிடைக்கும்?

பைசர் தயாரித்த கொரோனா தடுப்பூசியுடன் ஒப்பிடும் போது கோவிஷீல்ட் மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் குளிரில் மருந்தை வைத்து பயன்படுத்த முடியும். எனவே இது இந்திய கட்டமைப்புக்கு ஏற்ற கொரோனா தடுப்பூசி மருந்தாக இருக்கும். பைசர் கொரோனா தடுப்பூசி வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே உகந்ததாக இருக்கும். அடுத்த மாதம் முதல் இந்த மருந்து முழுமையான பயன்பாட்டுக்கு வரும்.

seithichurul

Trending

Exit mobile version