இந்தியா

சித்து திடீர் ராஜினாமா: தனிக்கட்சி ஆரம்பிக்க இருக்கின்றாரா?

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அம்ரிந்தர்சிங் அவர்கள் ராஜினாமா செய்தார் என்பதும் அதனை அடுத்து தற்போது சரண்ஜித் சிங் என்பவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பஞ்சாப் முதல்வராக இருந்த அம்ரிந்தர்சிங் ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் கடந்த சில மாதங்களாக இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் ராஜினாமாக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அம்ரிந்தர்சிங் விலகியதை அடுத்து தற்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்

சித்து தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து சித்து வெளியே வருவார் என்றும் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் சித்து தனிக் கட்சி ஆரம்பித்தால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், ஆளும் கட்சியாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்திலும் சித்துவின் பிரிவால் ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து விடுவோமோ என்று காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

இந்த நிலையில் நவ்ஜோத் சிங் சித்துவை சமாதானப்படுத்த காங்கிரஸ் தூதர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கட்சியில் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என சோனியா காந்தியின் சார்பில் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இனி அடுத்தடுத்த நாட்களில் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version