சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு.. சிம்புக்கு ஜோடி இவங்க தான்.. யாரு தெரியுமா?

Published

on

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் படம் வெந்து தணிந்தது காடு. முதல் முறையாக கவுதம் மேனன் கிராமம் – நகரம் என இரு இடங்களில் கதை நடப்பது போல இந்த படத்தை இயக்கி வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தாலும், யார் சிம்புக்கு ஜோடி என்ற விவரம் மட்டும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தைத் தயாரித்து வரும் வேல்ஸ் ஃபிளிம்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம், முத்துவின் பாவை சித்தி இத்னானி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சித்தி இத்னானி குஜராத்தி படமான கிராண்ட் ஹாலி படம் மூலம் நடிக்க வந்தவர். தெலுங்கில் பிரேம கதா சித்திரம் 2 உள்பட மூன்று படங்களில் நடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அன்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் மறக்குமா நெஞ்சம் என்ற பாடல் டீசரில் இடம்பெற்று இருந்தது. இந்த பாடலுக்காக இவரது ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.

வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3-ம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து சிம்பு பத்து தல மற்றும் கொரோனா குமாரு உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version