சினிமா செய்திகள்
’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் இணைந்த சித்தார்த் – ஜி.வி. பிரகாஷ்!
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சசி இயக்கவுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடிக்க உள்ளனர்.
சொல்லாமலே, ரோஜா கூட்டம், டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து ஐந்து, பிச்சைக்காரன் என வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி பெறுவதில் கெட்டிக்காரரான இயக்குநர் சசி, தற்போது, சித்தார்த் மற்றும் ஜி.வி. பிரகாஷை வைத்துச் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தை இயக்கவுள்ளார்.
படத்தின் தலைப்பில் இருந்தே, இது ஒரு ரோடு மூவியாகவோ அல்லது, சமூக விழிப்புணர்வு படமாகவோ இருக்கும் என தெரிகிறது.
மேலும், இந்த படத்தில் அக்காள் தம்பி பாசத்தை ஆழமாக சொல்லப்போவதாகவும் சசி தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பிச்சைக்காரன் படத்தில் அம்மா – பிள்ளை பாசம் ஹைலைட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான லிஜாமோள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பைக் சாம்பியனான ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும் டிராபிக் போலீசான சித்தார்த்துக்கு இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் காட்சிகள் படத்தில் இடம்பெறும் எனவும் தெரிகிறது.
படத்தில் சித்தார்த்துக்கு லீஜா நாயகியாக நடிக்கவுள்ளார். தம்பியாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷுக்கு யார் நாயகி என்று அறிவிக்கவில்லை.