சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய டுவிட் குறித்து சித்தார்த் விளக்கம்!

Published

on

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் பதிவு செய்த சித்தார்த்திற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் இதுகுறித்து நடிகர் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் அவர்கள் பிரதமரின் பஞ்சாப் பயணம் குறித்தும் அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது குறித்தும் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த டுவிட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய ட்வீட்டை நடிகர் சித்தார்த் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளது என்பதும் பாஜக பிரமுகர் உள்பட பல நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்தார்த்தின் டுவிட் குறித்து சாய்னா நேவால் கூறியபோது, ‘ஒரு நடிகராக அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் ஆனால் அவர் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று எனக்கு தெரியவில்லை என்றும் இது நன்றாக இல்லை என்றும் அவர் சிறந்த வார்த்தைகளை தன்னுடைய டுவிட்டரில் வெளிப்படுத்தி இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

அதேபோல் சாய்னா நேவால் கணவர், ‘உங்களது கருத்தை தாராளமாக வெளியே சொல்லலாம், ஆனால் தகுந்த வார்த்தையை பயன்படுத்தி சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வது சரிதானா என்று நினைக்கிறீர்களா என்றும் அவர் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் இதுகுறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார். “Cock &Bull” என்பதிலிருந்துதான் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு அந்த கருத்தை பதிவு செய்தேன் என்றும் ஆபாசமாக பதிவு செய்யவேண்டும் என்ற எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version