சினிமா செய்திகள்

பத்திரிகையாளர்களிடம் எரிந்து விழுந்த சித்தார்த்!

Published

on

டிஸ்னி தயாரிப்பான தி லயன் கிங் திரைப்படம் வரும் ஜூலை 19ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல உலக மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ஹீரோ சிங்கமான சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் தான் குரல் கொடுத்துள்ளார். சிம்பா சிங்கத்தின் அப்பா சிங்கத்திற்கு நடிகர் அரவிந்த் சாமி குரல் கொடுத்துள்ளார்.

மேலும், ரோபோ சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், சிங்கம் புலி, மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான விலங்குகளுக்கு தமிழ் டப்பிங் கொடுத்துள்ளனர்.

இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. அப்போது, சித்தார்த்திடம் சில பத்திரிகையாளர்கள், ஒரு டப்பிங் படத்திற்கே நீங்கள் எல்லாம் இப்படி ஒன்று கூடி வந்து புரமோஷன் செய்றீங்க? ஆனா நேரடி தமிழ் படத்திற்கே பல நடிகர்கள் புரமோஷன் செய்ய வருவதில்லையே எனக் கேட்டுள்ளனர்.

அப்போது, டென்சனான நடிகர் சித்தார்த், “நான் என் படங்கள் எல்லாவற்றுக்கும் புரமோஷனுக்கு போயிட்டுத் தான் இருக்கேன்.. எந்த நடிகர்கள் போகலையோ அவங்கள பார்த்து இந்த கேள்விய நீங்க கேளுங்க” என சற்று காட்டமாகவே பதில் கூறினார்.

சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சிவப்பு பச்சை மஞ்சள் திரைப்படமும் விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்த படத்தை பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version