சினிமா செய்திகள்

ஹாலிவுட் செல்லும் ஸ்ருதி ஹாசன்!

Published

on

நடிகை பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாலிவுட் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகர் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

தமிழில், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார். ஆனால், இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வி படமாக அமைந்ததால் தொடர்ந்து ஸ்ருதி ஹாசனுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

மேலும், வெளிநாட்டு இளைஞருடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ருதி ஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் இருவருக்கும் பிரேக் அப் ஆனதால், மீண்டும் சினிமா துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது ஹாலிவுட்டின் வெப் சீரிஸான டிரெஸ்டோன் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிஐஏ அதிகாரிகள் குறித்த புலனாய்வு சார்ந்த தொடர் இது என்பதால், போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version