சினிமா

கமலுக்கு பதில் ஸ்ருதிஹாசன்… பிக்பாஸ் அதிர்ச்சி அப்டேட்…..

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். எனவே, முதல் சீசன் துவங்கி தற்போது 5வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்களே உள்ளனர். எனவே, இந்நிகழ்ச்சி நல்ல டி.ஆர்.பி-ஐ பெற்று வருகிறது.அதிலும், கமல் வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இந்நிகழ்ச்சியை டி.ஆர்.பி எகிறிவிடும்.

இந்நிலையில், கமல்ஹாசன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்கா சென்ற அவர் சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எப்படியும் 2 வாரங்கள் அவரால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போகும்.எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் நடத்துவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில்,கமல்ஹாசன் உடல் நலம் தேறி வரும் வரை அவரின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version