கிரிக்கெட்

சாஹலின் மனைவியுடன் ஷ்ரேயாஸ் போட்ட டான்ஸ்! – #Viral

Published

on

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக உள்ளவர் ஷ்ரேயாஸ். தற்போது இந்தியா சார்பில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகிறார் ஷ்ரேயாஸ். அவ்வப்போது அவர், தன் இன்ஸ்டா பக்கத்தில் சுவாரஸ்யமான காணொலிகளை பகிர்வார். அந்த வகையில் அவர் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான சாஹலின் மனைவி, தனஶ்ரீயுடன் நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தனஶ்ரீக்கும் சாஹலுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புது மண ஜோடி, பல்வேறு கிரிக்கெட் வீரர்களை, அவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்து நேரத்தை செலவிட்டு வருகிறது.

அதே நேரத்தில் சாஹல், தன்யஶ்ரீ, ஷ்ரேயாஸ் ஆகியோர் ஃபிட்னஸிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அந்த வகையில் தான், ஷ்ரேயாஸுடன் ஜிம்மில் வொர்க்- அவுட் செய்த தன்யஶ்ரீ, ஒரு மாஸான ஆட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

அது குறித்தான வீடியோ இதோ:

இந்த வீடியோக்குப் பல பிரபலங்கள் கமென்ட் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ‘செம கூல் ப்ரோ’ என்றுள்ளார்.

 

 

Trending

Exit mobile version