கிரிக்கெட்

4 மாதங்களுக்கு விளையாட மாட்டாரா ஸ்ரேயாஸ் அய்யர்? அதிர்ச்சி தகவல்

Published

on

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிவடைந்தது 20 தொடரில் மிக அருமையாக விளையாடிய வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் அய்யர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு உடனடியாக தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தோள்பட்டையில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக அவர் நான்கு மாதங்களுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இனிவரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மட்டுமின்றி, வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்றே கருதப்படுகிறது. ஐபிஎல் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விரைவில் அவர் குணமாகி மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாடுவார் என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version