இந்தியா

கழுத்து மற்றும் கால் தெரிவது நிர்வாணம் அல்ல.. வைரல் ஆன கேரள தம்பதிகள்!

Published

on

கேரளாவைச் சேர்ந்த ரிஷி கார்த்திகேயன் மற்றும் லக்‌ஷ்மி இருவரும் கொரோனா காலத்தில் திருமணம் செய்த கொண்டனர்.

கொரோனா காலம் என்பதால் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. எனவே ஊரடங்கு எல்லாம் முடிந்த பிறகு, எடுக்கப்படும் போஸ்ட் வெட்டிங் ஷூட்டிங் செய்துள்ளனர்.

அதில் தம்பதிகள் இருவரும் வெள்ளை ஆடை ஒன்றைச் சுற்றிக்கொண்டு, வெட்டவெளியில் ரொமான்ஸ் செய்வது போல் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

இந்த படங்கள் இணையத்தில் வைரலானதும் பலரும் அவர்களை கழுவி ஊற்றி வருகின்றனர். அதை பார்த்த தம்பதிகள் இருவரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் அந்த போட்டோஷூட் பற்றி கருத்து தெரிவித்துள்ள தம்பதிகள், “கழுத்து மற்றும் கால் தெரிவது நிர்வாணம் அல்ல. நாங்கள் வெள்ளை ஆடை மட்டும் அணிந்து இருப்பது போல போட்டோ ஷூட் செய்யப்பட்டு இருந்தாலும், உள்ள முறையான ஆடைகளை அணிந்துதான் இருந்தோம். இந்த கருத்துகள் எங்களை பெரியளவில் பாதித்துள்ளது. ஒவுட் டோர் ஷூட்டிங் செய்யும் போது அடை அணியாமலா இருந்திருப்போம்.” என்று கேட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version