பிற விளையாட்டுகள்

பாரா ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம்!

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதால் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவானி லெகரா என்பவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த ராஜஸ்தானைச் சேர்ந்த அவானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு விபத்து காரணமாக முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் சில ஆண்டுகள் சிகிச்சையில் இருந்த அவானி, குணமடைந்த பின் மீண்டும் 2017ஆம் ஆண்டில் சர்வதேச சப்பாத்தி சுடும் போட்டியில் பங்கேற்றார்.

இந்த நிலையில் தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் அவானி நிச்சயம் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தது போலவே தங்கம் வென்றுள்ளார்.

ஏற்கனவே டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் வெள்ளி என்றுள்ளார் என்பதும் அதேபோல் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளி வென்றுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் அவானி லெகாரா தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் இந்தியாவின் வினோத்குமார் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version