உலகம்

10 கோடி பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் ஆனது.. அதிர்ச்சி விவரம்!

Published

on

நியூயார்க்: ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு ஒரே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் இது எந்த நாடு என்று விளக்கம் அளிக்கப்படவில்லை.

இரண்டு வாரம் முன் பேஸ்புக்கில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 9 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு விவரம் ஹேக் செய்யப்பட்டது. இதை யார் செய்தது என்று தகவல் வெளியாகவில்லை.

சென்று வருடம் பேஸ்புக்கில் ”வியூ அஸ்” என்ற வசதி கொண்டு வரப்பட்டது.  அதில் இருந்த குறைப்பாட்டை வைத்து ஹேக் செய்துள்ளனர்.

முதலில் ஒரு 40 அக்கவுண்டை மட்டுமே அவர்கள் ஹேக் செய்து இருக்கிறார்கள். அதை வைத்து அவர்களின் நண்பர்களின் நண்பர் என்று வரிசையாக நூல்பிடித்து சென்று ஹேக் செய்துள்ளனர்.

இவர்கள் எடுத்த தகவல்கள் என்றால் நம்முடைய போன் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள். நாம் யாரை காதலிக்கிறோம். நாம் எங்கு சாப்பிடுகிறோம். எங்கு அதிகமாக செல்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை மட்டும் எடுத்து இருக்கிறார்கள்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version