வணிகம்

அதிர்ச்சி… விவசாயிகளுக்கு வங்கிகளில் நகைக் கடன் கிடையாதா?

Published

on

மத்திய அரசு மார்ச் மாதம் முதல் வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்கக் கூடாது என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர உள்ளது.

இதனால் விவசாயிகள் பெறும் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இது குறித்து சட்டசபையில் திமுக கொறடா சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்திருந்தார்.

அதில், வணிக வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்குவதாக மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதை குறைக்கவே மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர உள்ளது.

ஆனால், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் விவசாயிகளுக்கான நகைக்கடன் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

வணிக வங்கிகள் நகை கடன் வாங்க பொது மக்கள் வரும் போது, அவர்கள் விவசாயிகளாக இல்லை என்றாலும், விவசாயிகளாகக் கணக்கு காண்பிக்கப்பட்டு, குறைந்த வட்டியில் கடன் வழங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளது.

இதனால் வங்கிகளுக்கு அரசு வழங்கும் மானிய தொகையின் செலவுகள் அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்தவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் எஸ்பிஐ வங்கி, யூனியன் வங்கி, விஜயா வங்கி போன்ற பொதுத் துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக் கடன் கிடைக்காது என்றும், கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் நகைக் கடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version