சினிமா செய்திகள்

அதிர்ச்சி.. கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் நடிகர் டாக்டர் சேதுராமன் காலமானார்!

Published

on

2013-ம் ஆண்டு வெளியான காமெடி திரைப்படமான, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த, சந்தானத்தின் நண்பருமான மருத்துவர் சேதுராமன், வியாழக்கிழமை இரவு இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு நேர தோல் மருத்துவரான சேதுராமன், சந்தானத்தின் மீதுள்ள நட்பின் காரணமாக, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் நடித்தார்.

சேதுராமனின் இறப்பு குறித்து டிவிட்டரில் பதிவு செய்துள்ள சந்தானம், “என் அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மறைவில் முற்றிலும் அதிர்ச்சியும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவரது ஆத்மா நிம்மதியா ஓய்வெடுக்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

காமெடி நடிகர் சதீஷ், “சோகமான செய்தி. நடிகரும் மருத்துவருமான சேதுராமன் சில மணி நேரங்களுக்கு முன்பு இருதய அடைப்பு காரணமாகக் காலமானார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version