இந்தியா

கைநிறைய சம்பளம்.. பெரிய நிறுவனத்தில் வேலை.. நகைக்கடையில் திருடியதால் கைதான ஐடி பொறியாளர்..!

Published

on

உலகப் புகழ் பெற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் நகைக்கடையில் திருடியதால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வேலையும் பறிபோகும் ஆபத்து உள்ளது

புனேவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட பொறியாளர் பணியில் அனுவேத் பிரகாஷ் சர்மா என்பவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் நல்ல அனுபவம் பெற்றதை அடுத்து அவருக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறது என்றும் அது மட்டும் இன்றி நிறுவனத்தின் சார்பில் ஏராளமான சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் தனது தேவைகள் போல போக தனக்கு வரும் சம்பளத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கும் அளவுக்கு அவருக்கு வருமானம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் புனேயில் உள்ள ஃபோனிக்ஸ் மால் சென்ற அவர் தங்க நகை கடையில் நுழைந்து நகை வாங்குவது போல வளையல்களை திருடி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து சிசிடிவி கட்சியின் மூலம் கண்டுபிடித்த கடைக்காரர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் புனேவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட ஐடி பொறியாளராக வேலை பார்ப்பது தெரியவந்தது. இவ்வளவு பெரிய பணியில் இருக்கும் அவர் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே மதிப்புடைய வளையல்களை திருடியதை பார்த்து நகைக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோன்று ஒரு நகைக்கடையில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 31 வயதான அனுவேத் பிரகாஷ் சர்மா இன்னும் பல ஆண்டுகளுக்கு ஐடி துறையில் அனுபவம் பெற இருக்கும் நிலையில் தற்போது அவர் திருட்டு குற்றத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அவரது பணி பறிபோகும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version