உலகம்

இறைச்சி சாப்பிட்டவருக்கு உடலில் காத்திருந்த அதிர்ச்சி; ஷாக் ஆன மருத்துவர்கள்!

Published

on

சீனாவில் உணவு கலப்படம் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இங்கு மேகி உள்ளிட்ட உணவுகளில் அதிகப்படியாக எம்எஸ்ஜி இருக்கும் என்று தடை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எம்எஸ்ஜி தினம்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒன்றாக உள்ளது.

அதே போன்று சில வருடங்களுக்கு முன்பு, 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட மாட்டு இறைச்சிகள் சந்தைகளில் விற்பனையானதாகவும் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது சீனாவில் உள்ள 43 வயதான ஸீ ஸோங் என்பவர் ஒரு மாதமாகத் தலைவலி, வலிப்பு என அவதிப்பட்டு வந்துள்ளார். சாதாரண தலைவலி என நினைத்த அவர் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்து வந்துள்ளார்.

அது ஒரு கட்டத்தில் தீவிரம் அடைந்து மருத்துவரை நாடியுள்ளார். மருத்துவர்களுக்கும் சோதனைக்கான மாதிரிகளை எடுத்துக்கொண்டு மத்திரை கொடுத்து அனுப்பிவிட்டனர். பின்னர் நடைபெற்ற சோதனையில் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.

ஸீ ஸோங் உடல் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்கள் இருந்துள்ளன. இது நீண்ட காலம் சமைக்கப்படாத இறைச்சியில் உள்ள ஒன்று. அதனை நாம் சரியாகச் சமைக்கவில்லை என்றால் நாடாப்புழுக்கள் உடல் முழுவதும் பரவி, உடல் உறுப்புகளைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை கூறி தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.

seithichurul

Trending

Exit mobile version