சினிமா செய்திகள்

கமல், ரஜினியுடன் நடித்த தமிழ் நடிகைக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

Published

on

கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்கள் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதும், கமல்ஹாசன், வடிவேலு, சத்யராஜ், திரிஷா, ஷெரின், உள்பட ஒருசில திரை உலக பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர் என்பதும் சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சோபனா கமல்ஹாசனுடன் ’எனக்குள் ஒருவன்’ ரஜினிகாந்துடன் ’சிவா’ பாக்யராஜூடன் ‘இது நம்ம ஆளு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் மறைந்த நடிகை பத்மினியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version