டிவி

இந்த வாரம் வெளியேறுவது ஷிவானிதான்..!- பிக்பாஸ் எலிமினேஷன் கன்ஃபார்ம்

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் ஷிவானி நாராயணன் தான் வெளியேறுகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த வாரம் தான் கடைசி எலிமினேஷ் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து பைனல்ஸ்-க்கான டாஸ்க்குகள் மட்டுமே நிகழ்ச்சியில் கவனம் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் சொந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல் பாலாஜிக்கு வேலை செய்வதற்காக மட்டுமே ஷிவானி பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதாக நெட்டிசன்கள் தொடர்ச்சியாகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஃப்ரீஸ் டாஸ்க்-ன் போது கூட ஷிவானியின் அம்மாவும் வீட்டுக்குள் நுழைந்து கத்த ஷிவானியின் அத்தனை வாய்ப்புகளும் தொடர்ந்து உடைந்து கொண்டே வந்தன.

இந்நிலையில் இந்த வித தனிப்பட்ட அடையாளங்களும் இல்லாமல் இருக்கும் ஷிவானி இந்நேரம் வெளியேறி இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கொதிக்க அது இந்த வாரமே நிகழவும் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version