சினிமா செய்திகள்

ஓவியாவை அடுத்து ஷிவாங்கியும் #GoBackModi ஹேஷ்டேக்: வளர்ந்து வரும் நேரத்தில் இதெல்லாம் தேவையா?

Published

on

பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருக்கும் நிலையில் இன்று காலையிலிருந்து #GoBackModi என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ஓவியா தனது டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் ஓவியாவை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவாங்கியும் தனது டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஸ்டேக்கை பதிவு செய்துள்ளார். காமெடியில் கலக்கி வரும் ஷிவாங்கி எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் நடுநிலையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்துவரும் நட்சத்திரத்திற்கு இது தேவையா? என்று பலர் கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றனர். அனைத்து தரப்பினர்களும் ஷிவாங்கியை ரசித்து வந்த நிலையில் தற்போது அவர் ஒரு பிரிவினர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருப்பது துரதிஷ்டமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் விஜய் டிவி எப்போதும் ஆளும் கட்சியை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஷிவாங்கி மீது விஜய் டிவி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

https://twitter.com/Sivaangi_Offi/status/1360538111986470914

Trending

Exit mobile version