கேலரி

பச்சை நிறமே..பச்சை நிறமே.. இளசுகளின் மனதை சுண்டி இழுத்த ஷிவானி…

Published

on

தொலைக்காட்சி நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து சிங்க பெண்ணாக வெளியே வந்தார் என்பது தெரிந்ததே. பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளிச்செனவும், கிளாமராகவும் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படங்கள் மூலம் குறுகிய காலத்திலேயே அவர் பிரபலமானார். சமூகவலைத்தளங்களில் இவருக்கெனவே ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஷிவானிக்கு திரையுலக வாய்ப்புகள் கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். அதோடு, தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பச்சை நிற புடவையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version