டிவி

பாலாவை அழ வைத்த சிவானி… ஆறுதல் சொல்லும் சுரேஷ் சக்கரவர்த்தி..!- பிக்பாஸ் வைரல் ப்ரோமோ

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இன்று வெளியாகி உள்ள கடைசி ப்ரோமோவில் வெளியில் இருந்து மீண்டு வீட்டுக்குள் வந்துள்ள சிவானி பாலாவை கதற வைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். வெளியேறிய அத்தனை ஹவுஸ்மேட்சுகளும் மீண்டும் வீட்டுக்குள் நுழைய பிக்பாஸ் வீடு மீண்டும் களேபறமாகத் தொடங்கி உள்ளது. அதிகப்படியான பாசம், வெறுப்பு, போட்டுக் கொடுத்தல் என பிக்பாஸ் வீடு களை கட்டத் தொடங்கி உள்ளது.

இன்றைய ப்ரோமோவில் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற சிவானி வீட்டுக்குள் பாலா உடன் பெரிதாக பிடி கொடுக்காமலே இருந்து வந்தார். ஆனால், பாலா பின்னாடியே தொடர்ந்து வர வெளியில் சென்று டிவி-யில் பார்த்த அத்தனைக்கும் சேர்த்து பாலாவை வெளுத்து வாங்குகிறார் சிவானி. இதற்கு உடனடியாக மன்னிப்புக் கேட்கும் பாலா சிவானியில் கண்டிப்பை ஓவர் டேக் செய்யும் வகையில் உடனே அழவும் செய்கிறார்.

அழுதுகொண்டே கடைசியாக ரீஎன்ட்ரி கொடுத்த சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சென்று அழுது கொண்டே புலம்புகிறார் பாலா. பாலா மட்டுமே இன்றைய தினத்தில் அத்தனை ப்ரோமோ வீடியோக்களையும் ஆக்கிரமித்து  உள்ளார்.

Trending

Exit mobile version